பாடசாலை, முன்பள்ளிகளில் அஸ்பெஸ்டோஸ் கூரைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு – சுற்றாடல் அமைச்சரின் யோசனைக்க அமைச்சரவை அனுமதி!
Wednesday, November 18th, 2020
பாடசாலை மற்றும் முன்பள்ளிகளில் காணப்படும் அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளுக்குப் பதிலாக சுற்றாடல் நேயப் பொருட்களை பயன்படுத்துவதென அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளால் சுவாசப் புற்றுநோய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தனது ஆய்வு முடிவினை வெளியிட்டதை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் நிர்மானிக்கப்படும் முன்பள்ளிகள் மற்றும் பாடசாலையின் கூரைத்தகடுகளுக்கு அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கு பதிலாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஓடு மற்றும் சூழல்நேயப் பொருட்கள் பயண்படுத்துவதென சுற்றாடல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூகம் விழிப்படைந்தால் மட்டுமே வாள்வெட்டுகளைக் குறைக்கலாம் - ரெஜினோல்ட் குரே !
வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
நாளைமுதல் 6 நாள்களுக்கு கனமழை - வெளியானது பிரதீபராஜாவின் எதிர்வுகூரல்!
|
|
|


