வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!

Wednesday, November 18th, 2020

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அதே நேரம் நேற்று இரவு துபாயிலிருந்து 55 பேர் கட்டு நாயக்க விமானநிலையத்திற்கு வந்தடைந்தனர் .

இதைத் தவிர மாலைதீவிலிருந்து 29 பேர் , இந்தியாவிலிருந்து 7 பேர் மற்றும் கட்டாரிலிருந்து ஒருவர் ஆகியோர் நேற்று நள்ளிரவு கட்டு நாயக்க விமானநிலையத்திற்கு வந்தடைந்தனர் .

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப் படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது

Related posts:

20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்ப...
வாகன விபத்துக்கள் அதிகரிப்பு - கடந்த 10 நாட்களில் 45 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பிரிவ...
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச...