யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியும் முடக்கம்: மாகாண சுகாதார திணைக்களம் அவசர கோரிக்கை!
Tuesday, October 27th, 2020
யாழ்.குருநகரில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு மாகாண சுகாதார திணைக்களம் கொரோரோனா செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனங்களில் மீன் கொண்டு சென்றிருந்த நிலையில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரும், பருத்துறையை சேர்ந்த ஒருவரும் பாசையூர் பகுதியில் உள்ள கடலுணவு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையிலேயே குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு சுகாதார திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் – எச்சரிக்கின்றது தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!
தகனம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை - பேராசிரியர் மெத்திகா விதானகே அறிவிப்பு!
நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவை கொழும்பில் - அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!
|
|
|


