கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!

Sunday, October 4th, 2020

கொழும்பிலுள்ள கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர்  அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள், கடைகளில் குவிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கம்பஹா-  திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பஹாவின் சில பகுதிகளில் ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதிகளுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர், தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே  மக்கள் இவ்வாறு அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கடைகளில் குவியத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரி...
வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே முதல் பணி - அமைச்சர் பிரசன்ன ...
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் ...