சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!
Saturday, October 3rd, 2020
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களை திறப்பது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
வரும் குளிர்காலத்தில் கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவக்கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்தே தற்போது விமான நிலையங்களை திறக்க வேண்டாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதை உலக சுகாதார அமைப்பு அறிவித்தால் மட்டுமே, விமான நிலையங்கள் ஜனவரி மாதத்திற்கு முன்பு திறக்கப்படும் என்று COVID-19 தடுப்பு பணிக்குழு குழு அறிவித்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் கொரோனாவின் பரவல் அதிகமாக இருக்கும் என முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
Related posts:
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் மீன்பிடி இறங்கு துறை: எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டம்!
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்க நேரிடும் - சுகாதார அமை...
புங்குடுதீவு வல்லனில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!
|
|
|


