மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய தீர்மானம் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, October 1st, 2020
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் மிக விரைவாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது.
கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையானது எதிர்வரும் 5 மாதங்களில் நிறைவுச் செய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரான ஜோஹன்ஸ்டோன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
இதில் குறைபாடுகள் நிலவின ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இதன் கட்டுமாணத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ!
சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!
உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை - தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியம...
|
|
|


