தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!
Tuesday, September 29th, 2020
செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற தேங்காய் ஏலத்தில், தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்போது ஆயிரம் தேங்காய்களுக்காக 61 ஆயிரம் ரூபாய் என்ற அதிகப்பட்ச விலையும் 51,500 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி குறித்த தேங்காய் ஏலத்தில் பெறப்பட்ட சராசரி விலை 56.49 ரூபாவாகும். இதன்போது குறித்த ஏலத்தில் விடப்பட்டிருந்த 707,000 தேங்காய்களில் சுமார் 29,000 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இவ்வாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் தேங்காய் உற்பத்தியானது 13.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச வாகனங்களை பயன்படுத்த தடை - தேர்தல்கள் ஆணைக்குழு!
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் -கோட்டாபய ராஜபக்ச!
உயர்தரப் பரீட்சை - அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விச...
|
|
|
இந்திய சேதனப் பசளையே இலங்கைக்கு உகந்தது - விமானம் மூலமாகவேனும் கொண்டுவருவோம் என அமைச்சர் மஹிந்தானந்த...
வடக்கின் நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலிய...
வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்...


