தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!
Saturday, September 26th, 2020
தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 – 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மை காலங்களில் இலங்கை சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து நாடாளுமன்றிலும் அண்மையில் பேசப்பட்டது. இந்நிலையிலேயே, தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேகக் கட்டுப்பாட்டை இனங்காண அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நடைமுறை!
தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் - பருத...
பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவ...
|
|
|


