அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை – ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020

அண்மையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் 90 சதவீதம் சமீப காலங்களில் திடீரென விற்கப்பட்டிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என்ற அச்சத்தில் மக்கள் திடீரென வாகனங்களை வாங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த பருவத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே எஞ்சியுள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெரெஞ்சி, திடீரென அல்லது அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வாகன சந்தையில் கிடைப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய நாடாக இலங்கை இருக்கும...
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...
பிரதமர் தினேஷ் குணவர்தன - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே விசேட சந்திப்பு – எந்த வழிகளில...

சாவகச்சேரி எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வடிகாலமைப்புக்கள் சீரின்மையால் தொற்று நோய்கள் ஏற்படும் அச்சம...
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு ஒன்றுபடுங்கள் – ஜனாதிபதி க...
180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 வீதம்  கட்டண அதிகரிப்பு!