முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள் மீட்பு – பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு!
Thursday, September 17th, 2020
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க முயற்சி!
மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பி...
|
|
|


