மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதிநவீன் நோயாளர் காவுவண்டி விபத்து!
Sunday, September 6th, 2020
மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதநவீனரக நோயாளர் காவு வண்டி குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே இன்று அதிகாலை1.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை ஆதார வைத்தியசாலை நோக்கி இருவருடன் பயணித்த குறித்த வண்டி, யாழ் – பருத்தித்துறை பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகில் இருந்த கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த வருடம் சுகாதார அமைச்சினால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நவீனரக(BMW)அம்புலன்ஸ் வண்டியே விபத்தில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் இந்தியா சென்றது ஜமுனா!
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு - ருவண்டா ஜனாதிபதியுடனும் சந்திப...
பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு - விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
|
|
|
நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவங்களுக்கும் அனுமதி வழங்காதிருக்க யோசனை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி...
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது - உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் உரிமைகளை பறிக்கவ...
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் - ...


