வெடித்துச் சிதறிய கவச வாகனம் – பிரான்ஸ் வீரர்கள் இருவர் பலி!
Sunday, September 6th, 2020
மாலியில் கவச வாகனம் வெடித்து விபத்துக்குள்ளானதால் இரு பிரான்ஸ் நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தி – சஹேல் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிரான்ஸ் இராணுவத்தின் தைரியத்தையும் உறுதியையும் பாராட்டியுள்ளார்.
அல்-கைதா மற்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதற்காக பிரான்ஸ் தனது பார்கேன் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2013 முதல் மேற்கு ஆபிரிக்காவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரை நிறுத்தியுள்ளது.
இதேவேளை மாலியின் வடகிழக்கு பிராந்தியமான கிடாலில் உள்ள டெசாலிட் என்ற பகுதியில் சனிக்கிழமை நடந்த வெடிவிபத்தில் மற்றொரு சிப்பாய் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலைக்கு செல்லாத அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள்: ஜேர்மன்
விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமானத்தில் இருந்து அபாய சமிக்ஞை!
நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் - ஆனால், அத்தகைய சூழ...
|
|
|


