நாட்டின் நிர்வாகத்துக்குள் இணைய வேண்டுமாயின், மற்றைய நாட்டு பிரஜாவுரிமையை கைவிடுவது உசிதமானது – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு !

Wednesday, September 2nd, 2020

நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்குள் இணையும் நபர், அந்த நாட்டில் மட்டுமே பிரஜாவுரிமையை கொண்டவராக இருத்தல் வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் நிர்வாகத்துக்குள் இணைய வேண்டுமாயின், மற்றைய நாட்டு பிரஜாவுரிமையை கைவிடுவது உசிதமானது என்றும் அமைச்சர் விமல் தெரிவித்தார்.

இன்றைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு முன்னர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு, இந்நாட்டின் பிரஜாவுரிமையை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்தார்.

பசில் ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு தேவையாயின், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைப் போல, அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு, வரவேண்டும் எனவும் விமல் குறிப்பிட்டார். அத்துடன் இரண்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்காக கால்கட்டை அவிழ்த்துவிட்டு, அவ்வாறானவர்களை நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தல், அவ்வளவுக்கு நல்லதல்ல எனவும் விமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் தொடரும் - யாழ். பல்கலை மாணவர் ஒ...
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் - ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்த...
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...