கிரிஸ்சர்ச் தீவிரவாதிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை!
Friday, August 28th, 2020
நியூசிலாந்து – கிரிஸ்சர்ச் மசூதியில் 51 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் விதமாக ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதுடைய வலதுசாரி பயங்கரவாத போக்குடைய தீவிரவாதியான பிரென்டன் டாரண்ட் முகநூல் நேரடி ஔிபரப்பை ஔிபரப்பியவாறு கிரிஸ்சர்ச் தாக்குதலை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து வரலாற்றில் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் விதமாக வழங்கப்பட்ட உச்சபட்ச சிறைத் தண்டனை இதுவாகும்.
Related posts:
இலண்டன் சென்ற விமானத்தில் கோளாறு - 209 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கியது பிரிட்டிஷ் எயார்வேஸ்!
பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை – ஈரான்!
போலியோ நோய் நிலைமையால் நியூயோர்கில் அவசர காலநிலை!
|
|
|


