யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு
Thursday, August 20th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தயசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது. பழைய பகையைத் தீர்க்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
வட்டுக்கோட்டையில் வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று!
பௌத்த சித்தாந்தத்தினூடாக பெற்றக்கொண்ட ஒழுக்கமானது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பா...
இலங்கையின் ஏற்றுமதிகளை சடுதியாக குறைத்த சீனா!
|
|
|
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன்...
பாடசாலை மாணவர்களுக்காக மேலும் 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துங்கள் - அமைச்சர் பந்துல குணவர...


