கடந்த 18 மாதங்களில் 12 ஆயிரம் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிறைவு!
Wednesday, August 19th, 2020
சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணைகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 18 மாதங்களில் 12 ஆயிரத்து 968 சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முடிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் என சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மேலும் 851 வழக்குகளின் விசாரணைகள் மாத்திரமே நிலுவையில் உள்ளதாகவும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்
Related posts:
வடக்கில் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார் -யாழ். கட்டளைத் தளபதி
இரண்டு இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - 6.4 பில்.டொலரை நட்ட ஈடாக பெற அரசாங்கம் நடவடிக்கை!
|
|
|


