கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் – பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!
Monday, August 17th, 2020
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே இன்றிலிருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 2020 ஜூலை 28 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமையவே பாடசாலைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை நிர்வாகங்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.நா.பொதுச் சபையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது!
ஏப்ரல் 21 தாக்குதல் - மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு!
இலங்கை – நேபாள அரச தலைவர்கள் சந்திப்பு - அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது க...
|
|
|


