கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் நாளை தீர்மானம்!

Sunday, August 9th, 2020

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி கைதிகளை பார்வையிட அனுமதிக்கலாமா என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சிறைச்சாலைகள் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களின் பரிந்துரைகளும் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொவிட் 19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள கைதிகளை வெளியாட்கள் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்குப் பின்னரே புதிய முறைமைகளை செயல்படுத்த எண்ணியுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகளை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் யாழ்.மாவட்ட மக்கள் வீதிக்கு வருவதை நாம் விரும்பவில்லை - யாழ் மாவட்ட இராணு...
பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவோருக்கு எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டு...