மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் – செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 31st, 2020

தமிழ் மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்லில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது அமோக ஆதரவினைத் தந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்விக்க என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் எனது சொல்லும் செயலும்  ஒன்றாகவே பயணிக்கிறது இதனை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறும் வரை  ஓயமாட்டேன்.

 ஆகவே தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை  முன்னின்று செயற்படுவேன் என அமைச்சர்   மேலும் தெரிவித்தார்.

Related posts:

மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே எமது மகிழ்ச்சி – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!
நிலைபேறானஅபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடக்கில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் செயற்பாடுகளின் ...
கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை  மக்களுக்கு சாதகமானது - டக்ளஸ் தேவானந்தா!
வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...