2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, July 28th, 2020
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 4ஆம் திகதி வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் எந்தப் பிரசார நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வேகக் கட்டுப்பாட்டை இனங்காண அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நடைமுறை!
ஈ.பி.டி.பியின் பிரான்ஸ் கிளையால் வேலணையில் ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வ...
வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் - ...
|
|
|


