நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!
Saturday, July 25th, 2020
நல்லூர் பிரதேச சபையினால் கொறோனாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வளாகத்தில் வாழைப்பழ விற்பனையிலீடுபட்டுவருகின்ற வியாபாரிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி அமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்த நிலையில் இன்று குறித்த விவகாரம் தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பில், நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்...
திட்டங்களை ஆராய்வதற்கான குழு அமைத்த அமைச்சர் டக்ளஸ் - ஜனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டார்!
|
|
|


