யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, July 23rd, 2020

திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த சந்தை வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுபவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கொறேனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடைமுறைகளின் போது பாராபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய வர்த்தகர்கள், குறித்த நடவடிக்கை காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அத்துடன், அண்மைக் காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் வர்த்தகர்களினால் எடுத்துக் கூறப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  தகவல்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள், குறித்த விவகாரத்திற்கு  நியாயமான முறையில் தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மத்தியில் உறுதியளித்தார்.

இதனிடையே நெல்லியடிப் பொதுச் சந்தைக்கும் சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தை நடவடிக்கைகளை அவதானித்ததுடன் வியாபாரிகளின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் - நாடாள...
சட்டத்தரணிகள் அறிவுசார்ந்து சிந்திக்க தவறின் முயற்சி வெற்றியளிக்காது - சுட்டிக்காட்டும் ஈ.பி.டி.பி.!

பேலியகொட மீன் சந்தையில் நவீன மயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனை பிரிவு பயனாளிகளிடம் கையளிப்பு!
நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுத்துங்கள் - செயளளர் நாயகம் டக்ளஸ் தேவானந...