சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் – விசாரணை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்!
Tuesday, July 21st, 2020
சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூன்று பேருக்கு பூஸா சிறைச்சாலையில் உள்ள போதை பொருள் தரகர் கொஸ்கொட தாரக மரண அச்சுறுத்தல் விடுதமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமறியல்கள் தலைமையக சிரேஸ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொஸ்கட தாரக உட்பட மேலும் சில கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட சென்ற அதிகாரிகள் மீதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவில் இராணுவ வாகனம் கோர விபத்து - இரண்டு அதிகாரிகள் உயிரிழப்பு!
சந்தேகத்திற்கிடமாக ஒன்றுகூடிய 41 இளைஞர்கள் மருதனார்மடத்தில் இராணுவத்தினாரால் கைது!
நாட்டில் வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்படுகிறது - அரசாங்க கணக்காய...
|
|
|


