யானை தாக்கி யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் மரணம்!
Monday, July 20th, 2020
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான 32 வயதுடைய காயத்திரி டில்ருக்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் நேற்று நடமாடியுள்ளனர்.
இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியபோதே விரிவுரையாளரை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.
Related posts:
ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின...
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!
|
|
|


