கொவிட் மைய தலைவர் வடபகுதி விஜயம் – கொரோனா நிலைமைகள் தொடர்பில் சிறப்பு ஆராய்வு!
Friday, July 17th, 2020
கொவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கொரோனா வைரஸ் தொற்று நோயின் புதிய நிலைமை தொடர்பாக ஆராய இன்று (17) வடக்கு பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது முப்படையினரால் நிர்வாகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.
அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள புதிய இராணுவ மருத்துவமனையை இராணுவ தளபதி திறந்து வைத்தார்.
இந்த வைத்தியசாலை இராணுவத்தினரது தேவையின் நிமித்தம் 75 படுக்கைகள் மற்றும் பிற வசதிகளுடன் 11 ஆவது இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இராணுவ தளபதி மற்றும் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை ஆரம்பம்!
அடுத்த மாதம் முதல் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் அமுல்!
பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரச காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொட...
|
|
|


