தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் – பொலிஸார் வேண்டுகோள்!
Tuesday, July 14th, 2020
கொரொனா பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச மரியாதையுடன் மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னின் இறுதிச் சடங்கு!
பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!
வங்காள விரிகுடாவில் நாளைமுதல் மீண்டும் காற்றுச் சுழற்சி - வானிலையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!
|
|
|


