சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!
Tuesday, July 14th, 2020
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல...
புலிகளிடம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொலை - இந்திய ஊடகங்கள் தகவல்!
ஒக்ரோபர் 10 - ஆரம்பமாகும் "செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு"
|
|
|


