கீரிமலை வெடிப்பு சம்பவம் – காயமடைந்தோர் உட்பட நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது!
Monday, July 13th, 2020
யாழ்ப்பாணம் – கீரிமலை, கூவில் பகுதியில் நேற்று குப்பைக்குள் இருந்த வெடி பொருளை வெடிக்க வைத்ததாக, அதில் காயமடைந்த மூவர் உட்பட நால்வர் இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்து, நெருப்பு வைத்த போது அது வெடித்துள்ளது. அதன்போது மூவரின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக வெடி பொருளை வெடிக்க வைத்ததுடன், அதன் பின்னர் ஓடி ஒழித்தனர். அதனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது நால்வரும் கைது செய்யப்பட்டனர்.” என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு!
வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
|
|
|
புரிந்துணர்வுகள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம் - யாழ். பல்கலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ர...
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை...
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை - 2025 பெப்ரவரி வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அத...


