வாக்களிப்பதற்கு விடுமுறை அளிப்பது அவசியம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Monday, July 13th, 2020
வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
40 கிலோ மீற்றருக்கு குறைவாயின் அரை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோ மீற்றர் இருப்பின் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் 100 முதல் 150 கிலோ மீற்றர் தூரமாயின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோ மீற்றருக்கு அதிகமாயின் இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒலிம்பிக்கில் பங்கேற்று மனிதாபிமான ஒத்துழைப்பை காட்டியுள்ளது இலங்கை - இலங்கையில் உள்ள ஜப்பானியத் த...
ஈ.பி.டி.பி ஆதரவு - காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சை குழு!
தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் மனுஷ நாணய...
|
|
|


