பிரித்தானியாவில குடியேற காலக்கெடு நிர்ணயம்!
Friday, July 29th, 2016
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரட்டனுக்குள் குடியேற வருவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பித்தானிய உள்ள நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் பிரட்டனில் குடியேறியா ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்று அந்த குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவிலிருந்து விலகுவதற்கு முன்னதாக அங்கு வந்தடைய பெருமளவில் மக்கள் படையெடுப்பர் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
Related posts:
போயிங் நிறுவனத்திடமிருந்து 80 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள ஈரான் அரசு!
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!
நீண்டகாலம் சிறையிலுள்ள இலங்கையரின் விடுதலை குறித்து பரிசீலிக்க இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


