கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, July 8th, 2020

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.

இதை சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரை இதத்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.

இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்றையதினம் கொண்டுசென்றிருந்ததை அடுத்து குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்பய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் - பட்டதாரிகள் மத்தியில் டக்...
பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அ...
இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை ...

கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்தி மக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் - முல்லை...
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
ஊர்காவற்துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் - வீடுகளை அமைப்பதற்காக இனங்கானப்பட்ட காணியையும் பார்வ...