அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் – நெய்வேலியில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
Wednesday, July 1st, 2020
நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
இதன்போது பொய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
இவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இதேபோல் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பொய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 70 பேர் பலி
ஒரு விடயத்தை மட்டும் மையப்படுத்தியதாக இலங்கை - இந்திய உறவு அமைந்துவிடக்கூடாது - இந்திய வெளிவிவகார அம...
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் - பொது...
|
|
|


