நல்லாட்சிக் கால நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமனம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Saturday, June 27th, 2020
கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரச வங்கிகளின் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக, ஆணைக்குழு ஒன்றை விரைவில் நிறுவ உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தினர் அலரி மாளிகையில் நேற்றைய தினம் பிரதமரைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது, அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச வங்கிகளில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஓய்வுபெறும்போது, ஓய்வூதியம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் குழு ஒன்றின் மூலம் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சிறுவர்களை போல செயற்படுகின்றனர் - இலங்கை வீரர்களை கடுமையாக விமர்சிக்கின்றார் தில்ஷன்!
பிரதமர் மஹிந்த - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலை காணொளி மூலம் கலந்துரையாடல்!
ரஷ்யாவுக்கு உதவினால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் - சீனாவை கடுமையாக எச்சரித்த அமெரிக்கா!
|
|
|


