தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என மார்தட்டுகின்றார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!!

Friday, June 26th, 2020

தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என்று தன்னைதானே கூறிக் கொள்ளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஊர்காவற்துறை சென் அன்ரனீஸ் சனசமூக நிலைய முன்றலில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

தீவகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை தீவகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியை ஈ.பி.டி.பி. மேற்கொண்டு, அதற்கான நிதி ஆதாரத்தினையும் பெற்றுக் கொண்ட

 நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றவர்கள் கிளிநொச்சி மக்களுக்கு தவறான கருத்தை தெருவித்து குழப்பங்களை ஏற்படுத்தியதனால் குறித்த திட்டம் இல்லாமல் செய்யப்பட்டது.

இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கான மாற்றுத் திட்டம் ஒன்றை வைத்திருப்பதாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts:

யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...
சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவருகின்றது - டக்ளஸ் தேவானந்தா
இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய ...
இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன்...