சட்ட விரோத மின்சாரம் பெற்ற நால்வர் கைது!

Thursday, July 28th, 2016

சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி நேற்று முன்தினம் திங்கட்கிழமை(25) இரவு மானிப்பாய் வடக்குப் பகுதியில் மானிப்பாய்ப் பொலிஸாரும், கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து திடீர்ச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் போது சட்ட விரோத முறையில் மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

புன்னாலைக் கட்டுவன் பகுதியில் சட்ட விரோத மின்சாரம் பெற்ற ஒருவரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் - கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அ...
பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில...
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக...