யாழ். குடாநாட்டில் வெள்ளரிப்பழச் சீசன் ஆரம்பம்!
Thursday, July 28th, 2016
யாழ். குடாநாட்டில் வெள்ளரிப்பழச் சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளரிப்பழ வியாபாரம் மிகவும் சூடுபிடித்துள்ளது.
ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின் விலை- 250 ரூபாவாகவும், சிறிய வெள்ளரிப்பழத்தின் விலை 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெள்ளரிப்பழத்தினைப் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதேவேளை, அச்சுவேலி, கோப்பாய், பண்டத்தரிப்பு ,சுன்னாகம், மருதனார்மடம் ,மல்லாகம், மாதகல், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வெள்ளரிப்பழச் செய்கையை விவசாயிகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நஷ்ட ஈடுகோரும் சீன நிறுவனம்!
ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!
கிளீன் வலி வடக்கை உருவாக்க ஈ.பி.டி.பி உறுப்பினர் சிறீதரன் ஆலோசனை!
|
|
|


