பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Friday, June 12th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கமைய பாடசாலை நிறைவடையும் நேரம் மற்றும் உயர்தரம், புலமை பரிசில் பரீட்சை ஆகியனவற்றை விரைந்து நடத்துவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கல்வி அமைச்சால் எதிர்வரும் ஜுன் மாதம் 29 ஆம் திகதி பாடசாலைகள் மிள ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தள்ளரைம குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையே விசேட சந்திப...
உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம...