ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க அனுமதி!
Wednesday, June 10th, 2020
கொரோனா தொற’றை அடுத்து சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இடைநிறுத்தப்பட்ட மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை மீளவும் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
திருமண நாடகம் செய்து ரூ45 லட்சம் அபகரித்த ஆசாமியும் பதிவாளரும் சிக்கினார்!
கடையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம்முதல் திறக்க நடவடிக...
|
|
|


