ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு !
Wednesday, June 10th, 2020
நாடாளுமன்ற தேர்தலை ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடாத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது
முன்பதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வந்த நிலையில் இந்த வாரம் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி பத்திரிகை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2019 இல் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் -மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்ச...
ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு - சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு!
பாரதப்பிரதமர் இலங்கை வருகை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்!
|
|
|


