இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுவாச நோயார் எண்ணிக்கையும் குறைவடைகிறது என சுகாதார பிரிவு அறிவிப்பு!

Tuesday, June 9th, 2020

இலங்கையில் நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றையதினம் கடற்படையினர் 10 பேரும், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 8 பேரும், சென்னையில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நால்வரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இது வரையில் 1857 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 990 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 49 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 856 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் முக கவசத்தினை பயன்படுத்துவதனால் உள்நாட்டில் சுவாசநோயாளர்கள் குறைவடைந்துள்ளதாக சுவாச நோய் தொடர்பிலான நிபுணர் மருத்துவர் துஷந்த மெதகெதர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை - இரணுவ தளபதி !
வடக்கில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பண...
உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் ந...