சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதி இரத்து!
Thursday, June 4th, 2020
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதியை இரத்துச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது..
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்துவதற்கு 2017ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த அனுமதியை தற்போதைய அமைச்சரவை இரத்துச் செய்துள்ளது.
இதனடிப்படையில் இனிவரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைத் தேர்வு அரசாங்கத்தின் பயிற்சி பாடசாலைகளிலேயே நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இங்கிலாந்து பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் - பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற...
சீனப் பிரதமர் லீ கியாங் - பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே சந்திப்பு - 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ...
|
|
|


