அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, June 3rd, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த மாகாணத்தில் பல ஆண்டுகளாக இறால் செய்கை பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும் அவை விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்படாமையால் பெரும் நட்டங்களை செய்கையாளர்கள் சந்திக்க நேரிட்டது.

ஆனாலும் குறித்த மாகாணத்தில் நவீன வசதிகளுடன் விஞ்ஞான பொறிமுறைகளை உள்ளடக்கிய வகையில் பொதுவான இறால் செய்கையை மேற்கொள்ளக் கூடிய இடங்களில் முன்னெடுத்தால் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலை உள்ளதால் அதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய “வனமி” இரால் செய்கையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த “வனமி” இறால் செய்கையை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உட்கட்டமைப்புத் தேவைகளை தீர்க்க ஈ.பி.டிபி முயற்சிப்பதை வரவேற்கிறேன்  - அம...
கடற்றொழிலாளர்களுக்கு தொழில் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் - - அமைச்ச...
30 ஆம் திகதிய இலங்கை - இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டி...