சுகாதார நடைமுறையை பேணும் வகையில் மரண வீட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

பிரதேசங்களில் மரண வீடொன்று ஏற்படுமாயின் அந்த வீட்டுக்குள்ளும் வெளியிலும் நடந்துகொள்வது தொடர்பில் பல்வேறான தடைகள் விதிக்கப்பட்டுள்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்..

இதனடிப்படையில் மரண வீட்டில் சீட்டு, டாம், கராம் விளையாடுதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சடலத்தை கூடிய விரைவில் புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண வீட்டில் மதுபானம் பருகுதல், புகைத்தல், வெற்றிலை போடுதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண வீட்டுக்கு வருவோருக்கு ஏதாவது பருகுவதற்கு கொடுக்கவேண்டுமாயின் சுடசுட பருகக் கொடுக்கவேண்டும். அதுவும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கோப்பைகளை பயன்படுத்தவேண்டும். அத்துடன் அதனை வீசிவிடவேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அடுத்தமாதமளவில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்...
நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டத்தின் பங்களிப்பு - ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரைய...
பெரும்போக நெற்பயிர் செய்கை - உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 ப...