விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Friday, May 29th, 2020

யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 300 பேர் வரையில் விடத்தற்பளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாதிரிகள் கடந்த 25ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அவை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

பரிசோதனை முடிவுகள் நேற்றுமுன்தினம் மாலை கிடைக்கப்பெற்றன. அதில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்றுக் காலை சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் கடற்படை பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related posts:


5000 ரூபா கொடுப்பனவுப் பணிகள் பூர்த்தி - காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்...
இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித ...
அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை -   பெப்ரல் அமைப்பின் நிறைவே...