அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி !

Wednesday, May 27th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்தவாரம் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை மற்றும் பப்பாசிச் செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.இதனால் குறித்த பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் டக்டளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த விவசாயிகள் தமது பயிரழிவுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிப்புக்களுக்க நஷ்ட ஈடு பெற்றுத்தர நடவடிக்கை மேடற்கொள்வதாக தெரிவித்திரிந்தார்;

இந்நிலையில் இன்றையதினம் நாடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த பயிரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்ரவை குறித்த அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - ...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதியால...
அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!