இலங்கையில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

இதனடிப்பிடையில் நேற்றையதினம் மட்டும் 137 பேருக்கு கொரோனா தொற்று உதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில், 127 பேர் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், 10 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா  நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1319 ஆக உயர்ந்துள்ளர்.

இந்நிலையில் குறித்த நோய் தொற்றிலிருந்து 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  அத்துடன் 597 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது

நேற்றைய தினம் 137 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டநிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா நோயாளர்கள் தொற்றுதி செய்யப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வலிகாமம் வடக்கில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் புதிய வகுப்பறைக் கட...
நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - செலவின அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்குமாற...