செவ்வாய்முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு!
Saturday, May 23rd, 2020
சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அனுமதி வழங்கப்பெற்றால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மறுபிறப்பில் வித்தியா!
நாட்டை ஆட்டங்காண வைக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள்!
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு - வழக்கு விசாரணைகள் நாளையதினம்யாழ்.நீதவான்...
|
|
|


