பிரான்ஸ் தாக்குதலில் இலங்கை தமிழர் ஒருவரும் பலி!

Wednesday, July 27th, 2016

பிரான்சில் இடம்பெற்ற   ஐ.எஸ். தீவிரவாதிகளின்   தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக  பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் ஞானசேகரம் வயது46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது –

பிரான்சில் கடந்தவாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில் அகப்பட்ட குறித்த யாழ் வாசி தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மூளை செயல் இழந்து மரணமடைந்துள்ளதாக  உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக 25 ஆண்டுகளிற்கு முன்பு பிரான்ஸ் சென்று தஞ்சமடைந்த நிலையில் வாழ்ந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் மூளை செயல்இழந்தபோதிலும் உடம்பின் பல பாகங்கள் நேற்று முன்தினம் செயல்பட்ட நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்த்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் முன்பு இடம்பெற்ற ஓர் அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் தாயார் , மற்றும் உடன் பிறந்த உறவுகள் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றனர் என   செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts:

இலங்கை – இந்திய உறவானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது - இலங்த்தீவின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த...
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹி...
அமைச்சர்களான விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் - அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட...