அமரர் செல்லப்பா உதயணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிரந்திய முக்கியஸ்தர்கள் அஞ்சலிமரியாதை!
Thursday, May 21st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் கட்சியின் ஜேர்மன் பிராந்திய செயற்பாட்டாளரும் அனைவராலும் அமைச்சர் என அன்பாக அழைக்கப்படும் அமரர் செல்லப்பா உதயணனின் பூதவுடலுக்கு கட்சியின் ஜேர்மன் பிராந்திய முக்கியஸ்தர்களால் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.
ஜேர்மன் “நொய்ஸ்” பகுதியில் வசித்துவந்த அமரர் செல்லப்பா உதயணனின் வயது மூப்பின் காரணமாக கடந்த 19 ஆம் திகதி தனது 73 ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடிருந்த பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!
வவுனியாவில் மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் - மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்...
|
|
|


