நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!
Tuesday, May 19th, 2020
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,630 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39174 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
மாணவி வித்தியா வழக்கின் தொகுப்பு வெளியானது: இருவருக்கு விடுதலை?
600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக...
அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் கலாநிதி விஜயதாஸவினால் அம...
|
|
|


